இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 29, 2016

பகைச் சிறப்பு ...!



676)
உனைஅறிய வேண்டுமெனில் உற்றுப்பார் உன்பகையை;
எல்லாம் தெரியும் அவர்க்கு


677)
சிறந்த எதிரியைத் தேர்ந்துன் உறவாக்கு;
எதிர்காலம் ஆகும் இலகு


678)
பகைத்தும்உன் அந்தரங்கம் காக்கப் படுமென்றால்;
அப்பகையை நட்பாக்கிக் கொள்


679)
வெற்றி அடைந்திட வேண்டுமெனில்; சுற்றி
இருந்திட வேண்டும் பகை


680)
புகையும் மனம்கொண்ட நட்பைவிட; கொல்லும்
பகையின் உறவு சிறப்பு


4 comments:

சீராளன்.வீ said...

வணக்கம் !

மதுகையில் பூக்கும் மனக்கவி தன்னின்
எதுகையில் காட்டும் எழில் !

அருமை தொடர வாழ்த்துகள்

Yarlpavanan said...

அருமையான பதிவு

duraian said...

வாழ்க ஐயா
வந்து வாழ்த்தியமைக்கு வந்தனங்கள்

duraian said...

@சீராளன்.வீ

வாழ்க ஐயா ... மிக நன்றி