இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 26, 2017

ஓவியம் : 1.. நான் , நான் தான் !



எந்தப்புற்றில் எந்தப்பாம்பிருக்கும் என்னும் பயத்தைவிட, பாம்புகளே இல்லாதப் புற்றுகளை கவலையுடன் கவனித்துவரும் காலக்கட்டத்தில், எதிர்பாராத ஒருப்புற்றில் இருந்து ஓவியமாய்க் கிளம்பி இருக்கிறது அனகோண்டா ஒன்று ! அது... பிக்பாஸ் (BIG BOSS) நிகழ்ச்சியில் ’’ஓவியா’’.
பெரியவர்களின் வாயிலாக, வாழ்வியல் கருத்துக்களை, கடினமானத் தத்துவங்களைக் கேட்கும் போது, அதைத் திணிப்பாகவே உணர்ந்து, தவிர்த்து செல்லவே விரும்புகிறது இன்றைய இளைய சமுதாயம்.. ஆனால்.....
20களில் உள்ள ஒரு சின்னப்பெண், எந்தவிதமான முன் தயாரிப்பும் இன்றி, போகும்போக்கில் , சொல்லிச் செல்லும் பேச்சுவழக்குகள் எல்லாமே வாழ்வியல் தத்துவங்களாய் அமைந்து, இளைஞருக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பிடித்துப்போகும் அளவுக்கு ஆழமானதாக , எளிதாக, விரும்பிஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதென்றால்., இதை மிகஅதிசயமான, அபூர்வமான நிகழ்வாகவேக் கருத வேண்டி இருக்கிறது .

#கவர்ந்த சில நிகவுகள், வாய்மொழிகள்.... இங்கே ’என்குரல்’வடிவில்
#அது ஒருபொழுதுபோக்கு நிகழ்ச்சிதான் எனினும், நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொண்டால் தவறில்லை.

என்குறள் ; 1006 -1010

விண்ணே எதிர்நிற்கும் போதும் எனக்கென்ன,
என்னோடு நான்நிற்கும் போது

அறிந்துகொள்ளச் சொவ்வேன்,என் சொல்லைப் புரிந்துகொள்ள
வில்லையென்றால் நீதான் பொறுப்பு

விட்டுத் தருவதை ’வீழ்ந்துவிட்டாய்’ என்றிழிந்தால்
கெட்டுவிடப் போவதில்லை நான்

உண்மையை ஓர்முறை பேசிப்பார், உன்னைப்
உனக்குப் பிடித்து விடும்

எல்லார்க்கும் தான்உண்டு சோகம்அதை எல்லாம்
வெளிக்காட்டி என்ன பயன்



No comments: